வைகை அணையின் நீர்மட்டம் 67 அடிக்கும் கீழே குறைந்தால் 58ஆம் கால்வாய்க்குத் தண்ணீர் செல்வது தானாக நின்றுவிடும் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே அமைந்துள்ள வைகை அணையிலிருந்து கடந்த அக்டோபர் 29ஆம் தேதி முதல் 58ஆம் கால்வாயில் வினாடிக்கு 50 கனஅடி முதல் 150 கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
வைகை அணையில் இருந்து மதுரை மாவட்டத்தின் பூர்வீக பாசனத்திற்கும், பெரியார் கால்வாய் பாசனத்திற்கும் வினாடிக்கு 2 ஆயிரத்து 400 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் ஓரிரு நாளில் 67 அடிக்கும் கீழே செல்லும் என்றும், இதனால், 58ஆம் கால்வாய்க்குச் செல்லும் தண்ணீர் தானா நின்று விடும் எனவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
















