கூடங்குளம் அருகே அரசு பேருந்து சாலையோரம் கவிழ்ந்த விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து நாகர்கோவிலுக்கு 65 பயணிகளுடன் அரசு பேருந்து புறப்பட்டு சென்றது. நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே முருகானந்தபுரம் பகுதியில் வந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தகவலறிந்து வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிடும் நோக்கில் ஓட்டுநர் பேருந்தை சாலையின் இடதுபுறமாக திருப்பியபோது மண்ணில் சக்கரம் சிக்கி கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது தெரியவந்தது.
















