கடலூர் அருகே சுடுகாட்டிற்கு சாலை வசதி கோரி இறந்தவரின் உடலைச் சாலையில் வைத்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நத்தப்பட்டு கிராமத்தில் இறந்தவர்கள் சடலத்தைச் சுடுகாட்டிற்கு கொண்டு செல்ல பல ஆண்டுகளாகப் பாதை இல்லாமல் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது.
இந்த நிலையில் அப்பகுதியில் உயிரிழந்த பலராமன் என்பவரின் சடலத்தைச் சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்லப் பாதை இல்லாததால், கோபமடைந்த பொதுமக்கள், சடலத்தைச் சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சென்ற போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், தனிநபரின் பட்டா நிலத்தில் இருந்த சுற்றுச்சுவரை அகற்றி சடலத்தைச் சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
















