அரட்டை செயலியில் கணினி அளவிலான கட்டாய எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனை வெளியிடுவதற்கான இறுதி கட்டத்தில் இருப்பதாகத் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீதர் வேம்பு அறிவித்துள்ளார்.
சாப்ட்வேர் நிறுவனமான ஸோகோ, கடந்த 2021-ம் ஆண்டு அரட்டை எனும் மெசேஜிங் செயலியை அறிமுகப்படுத்தியது.
ஆரம்பத்தில் சராசரியாக ஒரு நாளைக்கு சுமார் 300 டவுன்லோடு மட்டுமே ஆனது. இதனிடையே பிரதமரின் சுய சார்பு இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, மத்திய அமைச்சர்கள் பலரும் அரட்டை செயலியை மக்களிடம் பரிந்துரைத்தனர்.
இதன் விளைவாகத் தற்போது 1 கோடி பதிவிறக்கங்களை தாண்டி, இந்தியாவில் டாப் ரேங்க்கில் உள்ள செயலிகளில் ஒன்றாக அரட்டை உயர்ந்துள்ளது. இந்நிலையில் அரட்டை செயலியில் கணினி அளவிலான கட்டாய எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனை வெளியிடுவதற்கான இறுதி கட்டத்தில் இருப்பதாகத் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீதர் வேம்பு அறிவித்துள்ளார்.
இந்தச் செயலியின் புதுப்பிப்பு சில நாட்களுக்குள் பயனர்களைச் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
என்ட் டு எண்ட் என்க்ரிப்சன் என்பது தகவல்களை அனுப்புபவரும், பெறுபவரும் மட்டுமே பார்க்க முடியும் ஒரு வசதியாகும். சம்பந்தப்பட்ட நிறுவனம் கூடப் பயனர் அனுப்பிய தகவலைப் பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
















