மினிமம் பட்ஜெட்டில் மிடில் கிளாஸ் குடும்பங்களுக்காக படம் எடுத்து தனக்கென தனி தடம் பதித்த இயக்குனர் வி.சேகர் காலமான சம்பவம் திரை ரசிகர்களை வேதனைப்பட வைத்துள்ளது. அவரை பற்றிய ஒரு செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி….. இந்த வசனத்துக்கு ஏத்த மாதிரி இப்ப வர்ற படங்கள் வெளியாகுறது ரொம்ப குறைஞ்சு போச்சு. ஆனா 80,90 கள்ல குடும்ப பிரச்னை, நடுத்தர மக்களின் வாழ்க்கை என்று ரொம்ப அழகான காவியமா படங்கள் வந்தது. இந்த லிஸ்ட்டுல பாரதி ராஜா, பாக்கிய ராஜ், விசு இருந்தாலும் இதுல ஒரு பங்கு வி.சேகருக்கும் இருக்கு.
ஏவி.எம்.ஸ்டுடியோவில் கருப்பு வெள்ளை 16 எம்.எம். லேப்பில் உதவியாளராக 19 வயதில் வேலைக்குச் சேர்ந்தாரு. பிறகு மாநகராட்சி சுகாதார துறையில் மலேரியா ஒழிப்பு பணியாளராகவும் வேலை செய்தார். அந்தச் சமயத்தில் அவரிடம் ஒருவர் வந்து சார் ஏவிஎம்மில் சின்னவீடு படம் ஒளிபரப்பு செய்திருக்கின்றனர் என்று சொல்லியிருக்கிறார். அந்த நேரத்தில் படம் பார்க்கச் சென்றவர்கள் படம் நன்றாக உள்ளதாகப் பாக்யராஜிடம் கூற வி.சேகர் மட்டும் உங்களுடைய படத்தில் ஒரு பிழை உள்ளது.
பொண்ணோட கேரக்டர் சரியில்லன்னா ஹீரோ பிடிக்கலன்னு சொல்லலாம். ஆனா பெண் குண்டா இருக்கும் ஒரே காரணத்துக்காக வேணாம்னு சொல்லிருக்காரு. இந்தக் கருத்துத் தவறு.
அப்படின்னு பாக்யராஜிகிட்ட வி சேகர் சொல்ல, அவரை ரொம்ப பிடிச்சு போச்சு பாக்கிய ராஜிக்கு. பாக்யராஜ்கிட்ட 2 ஆண்டுகள் உதவியாளராக இருந்த பிறகு ‘நீங்களும் ஹீரோதான்’ என்ற படத்தை இயக்கினார் வி.சேகர். மீண்டும் நிழல்கள் ரவி, கவுண்டமணி, செந்தில் ஆகியோருடன் இணைந்து ‘நான் புடிச்ச மாப்பிள்ளை’ படத்தை இயக்கினார். அந்தப் படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்து வசூலில் சாதனை படைத்தது. பொறந்த வீடா புகுந்த வீடா’, ‘, ‘வரவு எட்டணா செலவு பத்தணா’, ‘காலம் மாறிப் போச்சு’, ‘பொங்கலோ பொங்கல்’,’விரலுக்கு ஏத்த வீக்கம்’, ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மைன்னு இவர் இயக்கிய பல படங்கள் குடும்பப் பாங்காவும் குடும்பங்கள் கொண்டாடும் படமாகவும் அமஞ்சது வடிவேலுக்கு இவர் இயக்கிய படங்களுக்கு பின் தான் மார்கெட்டும் எகிறுச்சு.
தனது திருவள்ளுவர் கலைக்கூடம் பட நிறுவனம் மூலம் பல வெற்றிப் படங்களை தயாரித்த வி.சேகர், சரத்குமார் நடிப்பில் ஏ.வெங்கடேஷ் இயக்கிய ‘ஏய்’ படத்தையும் தயாரித்தார். பிரபு நடித்த ‘பொண்ணு பாக்கப்போறேன்’ படத்திற்கு திரைக்கதை எழுதியவர், சின்னத்திரையில் ‘பொறந்த வீடா புகுந்த வீடா’, ‘வீட்டுக்கு வீடு’ தொடர்களை எடுத்திருக்கிறார்.
இப்படி இன்றைக்கு வரை அவருடைய படங்களை கொண்டாடி வருகிறோம். சில நாட்களுக்கு முன் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதியான நிலையில் அவரது உயிர் பிரிந்தது. விசேகர் மூச்சு நின்றாலும் அவருடைய படங்கள் மூலம் கிடைக்கப்பெற்ற உணர்வுக்கு முடிவு இல்லை.
















