எட்டிப் பிடிக்க முடியாத தங்கம் : என்னவாகும் பொற்கொல்லர்களின் எதிர்காலம்?
Sep 12, 2026, 02:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

எட்டிப் பிடிக்க முடியாத தங்கம் : என்னவாகும் பொற்கொல்லர்களின் எதிர்காலம்?

Murugesan M by Murugesan M
Nov 15, 2025, 07:50 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தங்​கம் விலை வரலாறு காணாத வகை​யில் தொடர்ந்து உயர்ந்து வரு​வ​தால் போது​மான பணி ஆணை​ இல்லாமல் 10 ஆயிரம் பொற்​கொல்​லர்​கள் சொந்த ஊர்களுக்​குச் சென்று​ விட்​ட​னர். எங்கே நடந்தது இந்தச் சம்பவம்? பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.

எட்டிப் பிடிக்க முடியாத உயரத்தில் ஏணி மேல் ஏணி வைத்து ஏறிக் கொண்டிருக்கும் தங்கம் விலை சாதாரண மக்களுக்கு எட்டாக் கனியாக மாறிக் கொண்டிருக்கிறது. இதனால் தங்கம் விற்பனை குறைவதோடு அவற்றின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், தங்கத்தை உற்பத்தி செய்யும் பொற்கொல்லர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பாதிப்பு கோவையிலும் எதிரொலித்துள்ளது.

தொழில் நகரான கோவை, தங்க நகை தயாரிப்​பிலும் தேசிய அளவில் புகழ் பெற்​றுள்​ளது. 40 ஆயிரம் பொற்​கொல்லர்​கள் உட்பட சுமார் ஒரு லட்​சம் பேர் வரை இத்தொழிலில் வேலை​ வாய்ப்பினை பெற்​றுள்​ளனர். ஆனால் தங்​கத்​தின் விலை தற்போது வரலாறு காணாத வகை​யில் உயர்ந்து வரு​வ​தால் நகைகளுக்​கான பணி ஆணை​ பாதிக்கப்பட்டுள்ளது. 2020-ஆம் ஆண்டுக்குப் பின் தங்​கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரு​கிறது.

மத்​திய அரசு தங்​கம் இறக்​கும​திக்கு விதிக்​கப்​பட்ட வரியை 15 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாகக் குறைத்துள்ளது. ஜிஎஸ்டி வரி 3 சதவீதம் விதிக்​கப்​படு​கிறது. ஆனாலும் உலக சந்தை நில​வரத்​துக்கு ஏற்பத் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வரு​கிறது. கோவை நகரில் சராசரி​யாக நாளொன்றுக்கு 200 கிலோ அளவுக்குத் தங்க நகை வணி​கம் நடை​பெற்று வந்​தது. ஆனால் இப்போது அப்படியில்லை. தொடரும் விலை உயர்​வால் தங்க நகை தயாரிப்புத் தொழில் முற்​றி​லும் முடங்கியுள்ளதாகத் தொழிலாளர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.

மேலும் கோவை​யில் மொத்​தம் 40 ஆயிரம் பொற்​கொல்​லர்​கள் உள்ளனர். தற்​போது நில​வும் நெருக்​கடி​யான சூழல் காரணமாக 10 ஆயிரம் பேர் தங்​களின் சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டனர். தாறுமாறாக உயரும் தங்கத்தின் விலையால் வாடிக்கையாளர்கள் மட்டுமல்ல, உற்பத்தியாளர்களும் பாதிக்கப்படுகின்றனர். அதிலும் தங்க நகை உற்பத்தியையே வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள பொற்கொல்லர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளது.

Tags: today gold rate22 carat gold rateதங்கம்Unattainable gold: What is the future of goldsmiths?
Share
Tweet
SendShare
Previous Post

மினிமம் பட்ஜெட்….மிடில் கிளாஸ் ஃபேமிலி : மனதை கவர்ந்த மக்கள் இயக்குனர்!

Next Post

எப்போது நிறைவேறும் அத்திக்கடவு – அவிநாசி திட்டம்? : ஏங்கித் தவிக்கும் விவசாயிகள்!

Related News

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies