பீகாரில் ஆட்சி அமைப்பது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லியில் ஆலோசனை நடத்தினார்.
பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. பாஜக 89 தொகுதிகளிலும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி 85 இடங்களிலும் வெற்றி பெற்றன.
இந்நிலையில் பீகாரில் ஆட்சி அமைப்பது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் செயல் தலைவர் சஞ்சய் ஜா மற்றும் பீகார் தேர்தல் பொறுப்பாளர்கள் தர்மேந்திர பிரதான் மற்றும் வினோத் தவ்டே ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதுதொடர்பான முக்கிய அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
















