டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தின் தீவிரவாதியான மருத்துவர் உமர் முகமது, தாக்குதலுக்கு முன் செல்போன்கள் பயன்படுத்திய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் உள்ள மொபைல் கடையில் இந்த காட்சி பதிவாகியுள்ளது. இந்த சிசிடிவி காட்சிகளை வைத்து, உமர் தாக்குதல் நடத்துவதற்கு முன்பு இரண்டு செல்போன்கள் வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
தாக்குதலுக்கு முன்பான உமரின் ஒவ்வொரு அசைவுகளையும் ஆராய்ந்து வரும் அதிகாரிகள், அக்டோபர் 30ம் தேதி மொபைல் கடையில் பதிவான இந்த சிசிடிவி காட்சியை கைப்பற்றியுள்ளனர்.
அதில் உமர், தனது கையில் இரண்டு செல்போன்களை வைத்துள்ளார். அவர் ஒன்றை கடைக்காரரிடம் சார்ஜ் போடுவதற்காக கொடுத்துவிட்டு, மற்றொன்றை தனது கையில் வைத்திருக்கிறார். இந்த காட்சியில் உமர் மிகவும் பதற்றமாக இருப்பது தெளிவாக தெரிகிறது.
இந்த செல்போன்களை டெல்லியில் நுழைவதற்கு முன் உமர் தூக்கி எறிந்துவிட்டதாக அதிகாரிகள் கருதுகின்றனர்.
















