தீவிரவாத தாக்குதல் சம்பவத்தால் மூடப்பட்ட டெல்லி செங்கோட்டை 5 நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் திறக்கப்படுகிறது.
கடந்த 10-ஆம் தேதி டெல்லி செங்கோட்டை அருகே லால் குயிலா மெட்ரோ ரயில் நிலையம் பகுதியில் கார் குண்டு வெடிப்பு தாக்குதல் சம்பவம் நிகழ்ந்தது.
இதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை அடுத்து டெல்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அத்துடன் செங்கோட்டை வளாகம் தற்காலிகமாக மூடப்பட்டது.
இந்நிலையில் 5 நாட்களுக்குப் பிறகு இன்று முதல் மீண்டும் மக்களின் பார்வைக்காக செங்கோட்டை திறக்கப்படுவதாக இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
















