“இண்டி” கூட்டணிக்கு தலைமை தாங்கும் தகுதி காங்கிரசுக்கு உள்ளதா என, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
பீகார் சட்டப்பேரவை தேர்தலில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி தலைமையிலான கூட்டணியில் 61 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ், வெறும் 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
இதனால் அதிருப்தி அடைந்த கூட்டணி கட்சிகள், இண்டி’ கூட்டணி தலைமை பொறுப்பில் இருந்து காங்கிரசை மாற்ற வேண்டும் என குரல் கொடுத்து வருகின்றன.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி, பாஜகவின் வெற்றியை காங்கிரசால் தடுக்க முடியாது என்பது தெளிவாக தெரிந்து விட்டதாகவும், எனவே, வலுவான கட்சிக்கே கூட்டணியின் தலைமை பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இதேபோல் பீகார் தேர்தலில் வாக்கு திருட்டு என்ற ராகுலின் பிரசாரம் பெரிதாக எடுபடவில்லை எனவும், அதற்கு ஆளும் கூட்டணி வகுத்த தரமான வியூகமே காரணம் எனவும் காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
தேர்தல் முடிவுகளை பார்க்கும்போது, ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலை வாக்காளர்களிடம் இருந்ததாகவே தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
















