நாட்டின் சுற்றுச்சூழல் ஆர்வலரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான சாலுமரத திம்மக்கா அம்மா 114வது வயதில் மறைவு வருத்தம் அளிப்பதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், ஆயிரக்கணக்கான மரங்களின் தாயாக அறியப்படும் திம்மக்கா அம்மா, சேவை, எளிமை மற்றும் இயற்கை அன்னைக்கு பக்தி நிறைந்த வாழ்க்கையை அர்பணித்துள்ளார்.
கர்நாடகாவில் காவல்துறை அதிகாரியாக பணியாற்றிய காலத்தில், அவருடன் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்ட தருணத்தை நினைவில் கொள்கிறேன், அந்த தருணம் என் மனதில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
அவர் சொர்க்க வாசஸ்தலத்திற்கு உயர்ந்துவிட்டாலும், அன்பாக வளர்த்த எண்ணற்ற மரங்கள் வரும் தலைமுறைகளுக்கு அவரது பாரம்பரியத்தை எடுத்துச்செல்லும் என்றும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
















