திருச்செந்தூரில் வாக்காளர் திருத்த கணக்கெடுப்பு முகாமில் பணியாற்றும் அலுவலர், திமுகவினருடன் இணைந்து வேண்டியவர்களின் விண்ணப்பங்களை மட்டும் நிரப்பி கொடுப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் நகராட்சிக்குட்பட்ட 21வது வார்டில் வாக்காளர் திருத்த கணக்கெடுப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் வாக்குச்சாவடி முகவர்கள் இல்லாமல், வேறு நபர்களை வைத்து விண்ணப்ப படிவங்கள் நிரப்பும் பணிகள் நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
முகாமில் உள்ள நபர் மதுபோதையில் திமுகவினருடன் இணைந்து, தங்களுக்கு சாதகமானவர்களுக்கு மட்டுமே மனுக்களை பெற்று நிரப்பி கொடுப்பதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரி நேரில் வந்து விசாரித்து முறையாக பதிலளிக்காமல் சென்றதாகவும் கூறப்படுகிறது. எனவே, முறைகேட்டில் ஈடுபடுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















