கர்நாடக அரசின் “நந்தினி” நிறுவனம் என்ற பெயரில் திருப்பூரில் போலியாக செயல்பட்டு வந்த கலப்பட நெய் ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
கர்நாடக கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு சார்பில் “நந்தினி” என்ற பெயரில் நெய் தயாரிக்கப்பட்டு, பல்வேறு மாநிலங்களில் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த நிலையில் , ‘நந்தினி’ நிறுவனம் பெயரில் போலியான மற்றும் கலப்பட நெய், சந்தையில் விற்கப்படுவதாக அம்மாநில ஊழல் தடுப்புப் பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.
கர்நாடக காவல்துறையின் விசாரணையில், திருப்பூர் மாவட்டம் ஆலங்கட்டிபாளையத்தில் போலி ஆலை செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த ஆலைக்கு அவிநாசி துணை வட்டாட்சியர் கௌரி, சீல் வைத்தார். மேலும் ஆலை நிர்வாகிகள் மகேந்திரா, தீபக், முனிராஜ், ஆபி அர்ஸ் ஆகியோரை பெங்களூரு போலீசார் கைது செய்தனர்.
















