சத்தீஸ்கர் மாநிலம் சுக்மாவில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நக்சலைட்டுகள் 3 பேர் கொல்லப்பட்டனர்.
சுக்மா பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பதுங்கியிருந்த நக்சல்கள், பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் நக்சலைட்டுகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
















