மயிலாடுதுறையில் மிகவும் பிரசித்தி பெற்ற காவிரி துலா உற்சவ தீர்த்தவாரி விழா கோலாகலமாக நடைபெற்றது.
மயிலாடுதுறை காவிரி கரையில் மயூரநாதர் ஆலயம், வதான்யேஸ்வரர் ஆலயம் உள்ளிட்டவற்றில் கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. இந்த நிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான காவிரி தீர்த்தவாரி நடைபெற்றது.
அப்போது இரு கரைகளிலும் அனைத்து ஆலயங்களிலும் இருந்து வந்த சுவாமி, அம்பாள் மற்றும் பஞ்ச மூர்த்திகள் பக்தர்களுக்கு காட்சியளித்து தீர்த்தவாரி அளித்தனர்.
16 வகை திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்தை தொடர்ந்து காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெற்றது.
தருமபுரம் ஆதின குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீன குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக சுவாமிகள் உட்பட இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒரே நேரத்தில் காவிரியில் புனித நீராடினர்.
















