மதுரை, எழுமலையில் அடுத்த மாதம் நடைபெறும் தமிழ்நாடு ராமகிருஷ்ணர், விவேகானந்தர் பக்தர்கள் மாநாட்டிற்கான முகூர்த்தக்கால் நடும் விழா மடாதிபதிகள் முன்னிலையில் நடைபெற்றது.
ராமகிருஷ்ணர் சாரதாதேவி மற்றும் விவேகானந்தர் சுவாமிகளின் பக்தர்கள், தமிழகம் முழுவதும் 40 இடங்களில் மடங்கள் அமைத்து ஆன்மீகத்தை போதித்து வருகின்றனர். கடந்த 32 ஆண்டுகளாக பக்தர்கள் மாநாடு நடத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ள இவர்கள், இந்த ஆண்டு மாநாட்டிற்கு எழுமலையை தேர்ந்தெடுத்துள்ளனர்.
அதன்படி, 33வது ராமகிருஷ்ணர், விவேகானந்தர் பக்தர்கள் மாநாடு டிசம்பர் 26 முதல் 28ம் தேதி வரை எழுமலையில் நடைபெறுகிறது. இதற்காக சென்னை, காஞ்சிபுரம், மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மடாதிபதிகள் முன்னிலையில், முகூர்த்தக்கால் நடும் விழா விமரிசையாக நடைபெற்றது.
















