S.I.R படிவங்களை விநியோகம் செய்வதில் திமுகவின் ஆதிக்கம் நூறு சதவீதம் இருப்பதாக தவெக துணை பொதுச்செயலாளர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திருச்சி மலைக்கோட்டையில் பேட்டியளித்த அவர், திமுகவை தவிர்த்து மற்ற கட்சியினருக்கு படிவங்கள் மறுக்கப்படுவதாக குற்றம்சாட்டினார்.
மேலும், S.I.R விவகாரத்தில் அநீதிக்கு துணை போகும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்திய ராஜ்மோகன், கட்சி வேறுபாடுகளை கடந்து வெளிப்படையாக தேர்தல் நடத்துவதற்கு அனைத்து அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
















