டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தை நிகழ்த்தி உயிரிழந்த மருத்துவர் உமர் மற்றும் கைதான மருத்துவர்கள் முஸாமில் கனி, ஷாஹீன் உள்ளிட்டோருக்கு ஜெய்ஷ் – இ- முகமது பயங்கரவாத அமைப்பு ஹவாலா நெட்வொர்க் மூலம் 20 லட்சம் ரூபாய் அனுப்பியது தெரியவந்துள்ளது.
டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ள நிலையில், மருத்துவர்கள் அடங்கிய பயங்கரவாத கும்பல் மற்றும் டெல்லி குண்டுவெடிப்பு பற்றி மத்திய உளவுத்துறையும் விசாரித்து முதற்கட்ட அறிக்கை அளித்துள்ளது.
அதில், மருத்துவர்கள் உமர், முஸாமில், ஷாஹீன் ஆகியோருக்கு ஜெய்ஷ் -இ-முகமது அமைப்பு ஹவாலா நெட்வொர்க் மூலம், 20 லட்சம் ரூபாயை அனுப்பி உள்ளதும்,
அதை வைத்தே கள்ள சந்தையில் அமோனியம் நைட்ரேட் மற்றும் டி.ஏ.டி.பி., எனப்படும் வேதிப்பொருட்களை குண்டு தயாரிக்க வாங்கி உள்ளதும் தெரியவந்துள்ளது.
மேலும், முன் கூட்டியே இந்த கும்பலை காஷ்மீர் போலீசார் கண்டுபிடித்ததால் டிசம்பர் 6ல் டெல்லியில் நடக்க இருந்த மிகப்பெரிய குண்டுவெடிப்பு தடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த சதித்திட்டத்தில் பாகிஸ்தானுக்கு நேரடியாக தொடர்பு உள்ளதாகவும் உளவுத்துறை தெரிவித்திருக்கிறது.
















