மும்பை – அகமதாபத் இடையே நடைபெற்று வரும் புல்லட் ரயில் திட்டப் பணிகளை பிரதமர் மோடி நேரில் ஆய்வு செய்தார்.
மும்பை – அகமதாபாத் புல்லட் ரயில் திட்டப் பணிகள் தொடர்பான அனுபவங்களை ஆவணப்படுத்துமாறு, அதன் பொறியாளர்களை பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். நாட்டின் முதல் புல்லட் ரயில் சேவை திட்டம், குஜராத் மாநிலம் அகமதாபத்தில் இருந்து மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை வரை தொடங்கப்படவுள்ளது.
இதற்காக, 508 கி.மீ., தொலைவுக்கு புல்லட் ரயில் இயங்குவதற்கான தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
சூரத்தில் பணிகளை மேற்கொண்டு வரும் புல்லட் ரயில் பொறியாளர்களுடன், பிரதமர் மோடி நேற்று கலந்துரையாடினார். அப்போது அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங் களையும் கேட்டறிந்தார்.
மும்பை – அகமதாபாத் இடையிலான புல்லட் ரயில் சேவை திட்டம் தொடர்பான அனுபவங்களை, பொறியாளர்கள் ஆவணப்படுத்தி வைக்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்துவதற்கு, அந்த அனுபவம் உதவியாக இருக்கும் என்றார்.
















