சவூதி அரேபியாவில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 42 இந்திய யாத்ரீகர்கள் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பேருந்து ஒன்று மெக்காவில் இருந்து மதீனாவுக்குப் சென்று கொண்டிருந்தது, இதில் இந்திய யாத்ரீகர்கள் பயணம் செய்ததாக தெரிகிறது. அப்போது திடீரென பேருந்து மீது டீசல் டேங்கர் லாரி மோதியது. இதில் பேருந்து தீப்பிடித்து எரிந்து முழுவதும் சேதமானது.
இந்த விபத்தில் 42 இந்திய யாத்ரீகர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஹைதராபாத்தைச் சேர்ந்த 20 பெண்கள் மற்றும் 11 குழந்தைகள் உயிரிழந்ததாக தெரிகிறது.
















