முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட 13 பேரின் வீடுகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின், பாஜக நிர்வாகி நாராயணன் திருப்பதி, நடிகர்கள் அஜித், அரவிந்த்சாமி உள்ளிட்டோரின் 12 வீடுகள் மற்றும் சிஆர்பிஎப் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக டிஜிபி அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்துள்ளது.
இதனையடுத்து, சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள வீடுகள் மற்றும் அலுவலகத்தில் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்ததை அடுத்து, மிரட்டல் விடுக்கப்பட்ட மின்னஞ்சல் ஐடியை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
















