மாஸ்க் திரைப்பட முன்னோட்ட நிகழ்ச்சியின் போது நடிகர் கவினிடம், மிடில் கிளாஸ் படத்தையும் சேர்த்து விளம்பரம் செய்யுங்கள் என நடிகர் முனிஸ்காந்த் கூறியதால் கலகலப்பான சூழல் ஏற்பட்டது.
விகர்ணன் அசோக் இயக்கத்தில் கவின் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்க் திரைப்படம் வரும் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இதன் முன்னோட்ட நிகழ்ச்சிக்காகத் திருப்பூர் வந்த கவின் மற்றும் விகர்ணன் அசோக் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது மிடில் கிளாஸ் பட முன்னோட்ட நிகழ்ச்சிக்கு வந்த நடிகர் முனிஸ்காந்த், தங்கள் படத்தோடு சேர்த்து, என் படத்தையும் சேர்த்து விளம்பரம் செய்யுங்கள் எனக் கூறியதால் கலகலப்பான சூழல் ஏற்பட்டது.
















