கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பொது வழிப்பாதையை மறித்துச் சுற்றுச்சுவர் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வரவணை பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் குறிப்பிட்ட சமூகத்தினர் அங்காளம்மன் கோயிலைக் கட்டி வழிபாடு செய்து வருகின்றனர்.
தற்போது அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் கோயில் உள்ளதால், அதனைச் சுற்றி இருக்கும் பொது வழிப்பாதையை மறித்துச் சுற்றுச்சுவர் எழுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள், சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
















