ஏ.டி.பி. இறுதிச்சுற்று டென்னிஸ் தொடரில் இத்தாலியின் ஜானிக் சின்னர் மீண்டும் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார்.
இத்தாலியின் துரின் நகரில் உலகின் டாப்-8 வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் ஏ.டி.பி. இறுதிச்சுற்று தொடர் நடைபெற்றது.
இதில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் இத்தாலியின் சின்னர், ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இத்தாலியின் ஜானிக் சின்னர், ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் உடன் மோதினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் சின்னர் 7-6, 7-5 என்ற செட் கணக்கில் வென்று மீண்டும் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
















