டெல்லி கார் குண்டுவெடிப்பில் மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்துள்ள காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முஃப்திக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
டெல்லி கார் குண்டுவெடிப்புச் சம்பவத்தை காஷ்மீர் பிரச்சனைகளுடன் தொடர்புபடுத்தி மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவர் மெகபூபா முஃப்தி மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதற்கு, பாஜக மூத்த தலைவர்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். முன்னாள் முதலமைச்சரான மெகபூபா முஃப்தி, ஜம்மு-காஷ்மீரில் நிலைமையைச் சீர்குலைக்க முயற்சிக்கிறார் என்றும், மோசமான முறையில் அரசியல் செய்கிறார் எனவும் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஒரு கட்சியின் தலைவரான மெகபூபா முஃப்தி இதுபோன்று பேசுவதை தவிர்க்க வேண்டும் என்றும், ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களுடன் நிற்காமல் கீழ்த்தரமாக நடந்து கொள்கிறார் எனவும் கூறியுள்ளனர்.
மேலும், ஜம்மு-காஷ்மீருக்கு பிரதமர் மோடி நிறைய திட்டங்களை கொண்டு வந்துள்ளார் எனவும் பாஜக மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
















