ஆர்சிபி அணியை காந்தாரா படத் தயாரிப்பு நிறுவனம் வாங்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பிரிட்டனின் டயாஜியோ நிறுவனத்தின் இந்திய பிரிவான யுனைடெட் ஸ்பிரிட்ஸ், ஆர்சிபி அணியை நிர்வகித்து வந்த நிலையில், ஆர்சிபி அணியை அடுத்தாண்டு மார்ச் இறுதிக்குள் அணியை விற்க திட்டமிட்டுள்ளது.
அணியை வாங்க சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம், அதானி குழுமம் உள்ளிட்டவை போட்டி போட்டு வருகின்றன.
இந்தச் சூழலில், ஹாம்பலே பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் ஆசிபி அணியை வாங்குவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
















