பீகாரில் ஆறு எம்எல்ஏவுக்கு ஒருவரை அமைச்சராக்கும் புது ஃபார்முலாவை தேசிய ஜனநாயக கூட்டணி வகுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பீகாரில் 243 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 202 இடங்களை கைப்பற்றி ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றது.
முதலமைச்சர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 85 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், மத்திய அமைச்சர் சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்திக்கு 19 இடங்கள் கிடைத்தன.
இந்நிலையில் ஆறு எம்எல்ஏவுக்கு ஒருவரை அமைச்சராக்கும் புது ஃபார்முலாவை தேசிய ஜனநாயக கூட்டணி வகுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எனவே பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரம் அடைந்துள்ளன.
















