சென்னை வடபழனி அருகே கஞ்சா புகைத்ததைத் தட்டிக்கேட்ட விவகாரத்தில் இளைஞரைக் கழுத்தறுத்த கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வடபழனி எஸ்.எஸ்.வி. நகர் பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான சிவசங்கர் என்பவர் அதே பகுதியில் உள்ள மைதானத்தில் நண்பர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு கஞ்சா புகைத்துக் கொண்டிருந்த பர்தீன் என்பவரைச் சிவசங்கர் விரட்டியதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து, வடபழனி காவல் நிலையத்தில் பர்தீன் அளித்த புகாரின்பேரில் சிவசங்கரை போலீசார் எச்சரித்து அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
பின்னர், தந்தைக்கு உணவு வாங்குவதற்காக நண்பர் மணி உடன் இருசக்கர வாகனத்தில் சென்ற சிவசங்கரை, பர்தீனின் நண்பர் இம்தியாஸ் கீழே தள்ளி மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்தை அறுத்துவிட்டு தப்பியோடினார்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் சிவசங்கரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
















