ஓபிசி மற்றும் பட்டியலின பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில், வசதி படைத்தவர்களுக்கான கிரீமி லேயர் நடைமுறையை ஆதரிப்பதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் தெரிவித்துள்ளார்.
ஆந்திரப்பிரதேச மாநிலம், அமராவதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், நாட்டில் சமத்துவம் அல்லது பெண்கள் அதிகாரமளித்தல் வேகமெடுத்து வருவதாகவும், அவர்களுக்கு வழங்கப்பட்ட பாகுபாடு கடுமையாக விமர்சிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
இடஒதுக்கீட்டில் ஒரு ஐஏஎஸ் அதிகாரியின் குழந்தையை, ஏழை விவசாயத் தொழிலாளியின் சந்ததியினருடன் ஒப்பிட முடியாது எனக் கூறினார்.
ஓபிசி மற்றும் பட்டியலின பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில், வசதி படைத்தவர்களுக்கான கிரீமி லேயர் நடைமுறையை ஆதரிப்பதாக உறுதியளித்தார்.
பழங்குடியின, பட்டியலினத்தவர்களுக்கான கிரீமி லேயரை அடையாளம் காண மாநிலங்கள் ஒரு கொள்கையை உருவாக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
மேலும், இந்திய அரசியலமைப்பு நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய நான்கு தூண்களின் மீது நிற்கிறது எனத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கூறினார்.
















