கரூர் அருகே உருட்டு கட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடன் சுற்றித்திரியும் மர்ம நபர்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கரூரின் கிராமப்புற பகுதிகளில் மர்ம நபர்களின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாகக் கூறப்படும் நிலையில், கூலி நாயக்கனூர் கிராமத்தில் உருட்டுக்கட்டை போன்ற ஆயுதங்களுடன் நான்கு கொள்ளையர்கள் ஒவ்வொரு வீடாக நோட்டமிட்டனர்.
பின்னர் மாரப்பன் என்பவரின் வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்கள் அங்கிருந்து ஐந்தரை சவரன் தங்க நகையைத் திருடிவிட்டு சென்றனர்.
இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் 2 தனிப்படைகள் அமைத்துக் கொள்ளையர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே மர்ம நபர்களின் நடமாட்டத்தை தடுக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
















