திருச்செங்கோடு அருகே கோயில் வளாகத்தில் நிரப்பப்பட்டிருந்த எஸ்ஐஆர் விண்ணப்பப் படிவங்கள் கேட்பாரற்று சிதறிக் கிடந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் சிறப்பு வாக்காளர் திருத்தப் பட்டியல் தயாரிக்க வீடு வீடாக எஸ்ஐஆர் படிவங்கள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்த குமாரமங்கலம் நாடார் தெருவில் உள்ள செல்வ விநாயகர் கோயிலில் எஸ்ஐஆர் விண்ணப்ப படிவங்கள் சிதறி கிடந்தன.
கோயில் வளாகத்தில் யாரும் இல்லாத நிலையில் விண்ணப்பங்கள் கேட்பாரற்று கிடந்தன. பின்னர், அங்கு வந்த வாக்குச்சாவடி நிலைய முகவர், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு சென்றதாகக் கூறியதோடு சிதறி கிடந்த விண்ணப்பங்களை எடுத்துச் சென்றதாகப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தகவலறிந்து வந்த வருவாய் ஆய்வாளர் மற்றும் விஏஓ சம்பவ இடத்தை ஆய்வு செய்து பார்வையிட்டனர்.
மேலும், எஸ்ஐஆர் விண்ணப்பங்கள் கேட்பாரற்று சிதறிக் கிடந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தனர்.
















