திருவண்ணாமலை அருகே மூதாட்டி மீது டேங்கர் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் லாரியில் இருந்து வெளியான டீசலை பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு பிடித்து சென்றனர்.
தென்அரசம்பட்டு கிராமத்தை சேர்ந்த கனகாம்பரம் என்ற மூதாட்டி ஒருவர் சாலையைக் கடக்க முயன்றபோது, திருச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்த டீசல் டேங்கர் லாரி அதிவேகமாக அவர்மீது மோதியது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், லாரியும் தலைகீழாகக் கவிழ்ந்தது.
இதைக்கண்ட அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் டேங்கர் லாரியில் இருந்து வெளியான டீசலை குடங்கள் மற்றும் வாளியில் போட்டி போட்டுக்கொண்டு பிடித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
லாரி மோதி மூதாட்டி பலியான இடத்தில் டீசலை பிடிக்கப் பொதுமக்கள் ஆர்வம் காட்டியது விமர்சனத்துக்குள்ளாகியது.
















