கும்பகோணம் அருகே டாஸ்மாக் விற்பனையாளர் மதுப்பிரியரை கன்னத்தில் மாறி மாறி அறைந்த சிசிடிவி காட்சி வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாராசுரத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக்கடைக்கு மதுப்பிரியர் ஒருவர் மதுபானம் வாங்குவதற்காகச் சென்றுள்ளார்.
அப்போது அவர் வாங்கிய மதுபாட்டிலின் மூடி திறந்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து டாஸ்மாக் விற்பனையாளர்களிடம் அவர் கேள்வி எழுப்பி, தனக்கு வேறு மதுபாட்டிலை கொடுக்குமாறு மதுப்பிரியர் கேட்டுள்ளார்.
இதனால் கோபமடைந்த விற்பனையாளர் செல்லத்துரை கடையிலிருந்து வெளியே வந்து மதுப்பிரியரை கன்னத்தில் மாறி மாறி அறைந்துள்ளார்.
















