சபரிமலையில் தங்கம் திருட்டு வழக்கு தொடர்பாக, துவார பாலகர் சிலையில் 15 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
சபரிமலை சன்னிதானம் அமைந்திருக்கூடிய பகுதியில் 1998ஆம் ஆண்டு மேற்கூரை மற்றும் வாசப்படி மற்றும் முன்பகுதியில் உள்ள துவார பாலகர் சிலை ஆகிய இடங்களில் தங்க தகடுகள் பதிக்கப்பட்டது.
இவற்றிலிருந்து தங்கம் திருடு போய் இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து, தங்க தகுடுகளின் தரம் குறைந்துவிட்டதாகவும், பழுதடைந்த தகரத்தை புதுப்பித்துத் தருவதாகவும் எடுத்துச் சென்ற உன்னிகிருஷ்ணன் போத்தி மற்றும் உடைந்தையாக இருந்த அதிகாரிகள்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இது குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தங்க தகடுகள் பதிக்கப்பட்ட இடத்தை சிறப்பு புலனாய்வு குழுவினர் ஆய்வு செய்து, தகடுகளில் உள்ள தங்கத்தின் தரத்தை சோதனை செய்ய மாதிரிகள் சேகரித்துள்ளனர்.
















