நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் கஞ்சா போதையில் இளைஞர்கள் சிலர் கற்கள் மற்றும் ஆயுதங்களால் கடைகளையும், பொதுமக்களையும் தாக்கிய வீடியோ காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே செயல்படும் டாஸ்மாக் கடைகளை சுற்றி அதிக அளவில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.
இதனால் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி பொதுமக்களை தாக்குவது, கத்தியைக் காட்டி பணம் பறிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வரும் தொடர் கதையாகி வருகிறது.
இந்நிலையில், ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் இளைஞர்கள் சிலர் கஞ்சா போதையில் சென்று அங்கிருந்த பொதுமக்களையும், கடைகளையும் கற்கள் மற்றும் ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.
இதுகுறித்த வீடியோ வெளியான நிலையில், பொது மக்களை தாக்கிய நபர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
















