கடந்த 25 ஆண்டுகளில் இந்தியா பல சோதனைகளை சந்தித்தாலும், நாட்டின் வளர்ச்சியை யவராலும் நிறுத்த முடியவில்லை என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற ராம்நாத் கோயங்கா சொற்பொழிவு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், வலுவான ஜனநாயகம் என்பது, மக்களின் பங்கேற்பில் அளவிடப்படுவதாகத் தெரிவித்தார்.
ஜனநாயகத்தின் மீது மக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பது தேர்தலில் பிரதிபலிக்கும் எனக் கூறிய பிரதமர் மோடி, கடந்த 25 ஆண்டுகளில் இந்தியா பல சோதனைகளை சந்தித்தாலும், நாட்டின் வளர்ச்சியை யவராலும் நிறுத்த முடியவில்லை என பெருமிதம் தெரிவித்தார்.
















