தன் காதலனை மிரட்டித் திருமணம் செய்யவிடாமல் தடுப்பதாகத் திமுக கவுன்சிலர்மீது இளம் பெண் ஒருவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார்.
ஜாகிர் அம்மா பாளையத்தைச் சேர்ந்த சௌந்தர்யா என்ற பெண்ணும், 19வது வார்டு திமுக கவுன்சிலர் தேன்மொழியின் மகன் மணிகண்டன் என்பவரும் கடந்த 4 ஆண்டுகளாகக் காதலித்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் செளந்தர்யா தனது உறவினர்களுடன் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் கடந்த 2021ம் ஆண்டு முதல் தன்னை காதலித்து வந்த மணிகண்டனை அவரது தாயும், திமுக கவுன்சிலருமான தேன்மொழி என்பவர் வீட்டுச்சிறை வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் தேன்மொழி மற்றும் அவரது கணவர் தனது குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் அந்தப் பெண் புகார் மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
எனவே தன் காதலனை மிரட்டித் திருமணம் செய்ய விடாமல் தடுக்கும் அவரது பெற்றோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தனது புகாரில் கோரிக்கை விடுத்துள்ளார்.
















