டெல்லி கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி உமர் நபி இளைஞர்களை மூளைச் சலவை செய்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த நவம்பர் 10-ம் தேதி டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் 13 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்தனர்.
நாட்டையே உலுக்கிய இச்சம்பவத்தில் காஷ்மீரைச் சேர்ந்த மருத்துவர் உமர் நபி என்பவரே ஈடுபட்டது தெரியவந்தது. வழக்கு தொடர்பாகப் பலரை பிடித்துப் புலனாய்வு அமைப்புகள் விசாரித்து வரும் நிலையில், நாள்தோறும் புதுப்புது தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் டெல்லி தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி உமர் நபி இளைஞர்களை மூளைச் சலவை செய்த வீடியோ வெளியாகியுள்ளது.
அதில், தற்கொலை தாக்குதல் என முத்திரை குத்தப்படுவது உண்மையில் இஸ்லாத்தில் ஒரு தியாக நடவடிக்கை எனப் பயங்கரவாதி உமர் நபி பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
















