ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே நான்கரை கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களைச் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மீமிசலில் இருந்து தொண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தை எஸ்.பி.பட்டினம் பகுதியில் மறித்துச் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது, பயணிகளின் இருக்கைக்குக் கீழே கேட்பாரற்று கிடந்த மர்ம பையைச் சோதனையிட்டபோது அதில் ஒன்றரை கிலோ உயர்ரக போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட அவற்றின் மதிப்பு சர்வதேச சந்தையில் நான்கரை கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாகப் பேருந்து ஓட்டநர் மற்றும் நடத்துநரிடம் விசாரணை நடத்திய சுங்கத்துறை அதிகாரிகள், சம்பவத்தில் தொடர்புடைய கடத்தல் கும்பலைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
















