அமெரிக்க பல்கலைக்கழகங்களில் புதிய சர்வதேச மாணவர்களின் சேர்க்கை 17 சதவீதம் சரிந்துள்ளது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் நிதி உதவியுடன் செயல்படும், ‘ஓபன் டோர்ஸ் டேட்டா’ என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவின், 61 சதவீத உயர் கல்வி நிறுவனங்கள் இந்திய மாணவர்கள் சேர்க்கை சரிவடைந்ததாகக் கூறியுள்ளது.
இருப்பினும் 2024 – 25 ஒட்டுமொத்த கல்வி ஆண்டில், 3.63 லட்சம் இந்திய மாணவர்களுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















