மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே பெர்மிட் இல்லாமல் மண் கடத்திச் சென்ற 3 லாரிகளை சிறை பிடித்துக் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருமால் கிராமத்தில் உள்ள குவாரியில் இருந்து உரிய பெர்மிட் இல்லாமல் அதிக பாரத்துடன் மண்ணை கடத்திச் சென்ற 3 லாரிகளை கிராம மக்கள் சிறை பிடித்தனர்.
திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்குத் தகவல் தெரிவித்தும் சம்பவ இடத்திற்கு வரவில்லை எனக்கூறி 3 மணி நேரத்திற்கும் மேலாக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற ஏடிஎஸ்பி தலைமையிலான போலீசார், கிராம மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பெர்மிட் இல்லாமல் மண் கடத்திச் செல்லும் குவாரி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கிராம சாலைகளில் 10 டன்னுக்கு கூடுதலாகப் பாரம் ஏற்றிச் சென்றால் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும், கிராம மக்கள் வலியுறுத்தினர்.
















