சென்னை அடுத்துள்ள பல்லாவரத்தில் அரசுக்குச் சொந்தமான ஓ.எஸ்.ஆர் நிலத்தை ஆளும் கட்சியினர் ஆதரவோடு சிலர் ஆக்கிரமித்துள்ளதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
TNHB காலனியில் தொல்லியல் துறைக்குச் சொந்தமான நிலம் ஒன்று இருந்தது. இதில் சிறுவர்கள் பூங்கா இருந்து வந்த நிலையில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்போர் நல சங்கத்தினர் ஆக்கிரமித்துக் கட்டிடம் எழுப்பியதாகக் கூறப்படுகிறது.
ஆளும் கட்சியினரின் ஆதரவோடு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதாகத் தெரிவிக்கும் அப்பகுதி மக்கள் பலமுறை புகாரளித்தும் நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை எனவும் குற்றம்சாட்டினர்.
















