SIR படிவத்தில் தங்கள் ஊரின் பெயர் தவறாகத் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி தென்காசி ஆட்சியர் அலுவலகம் முன்பு திரளான மக்கள் குவிந்தனர்.
திப்பணம்பட்டி அடுத்த ஆரியங்காவூரில் SIR படிவங்களை வினியோகிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள படிவத்தில் துரைசாமியாபுரம் என ஊரின் பெயர் தவறாகத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த வாக்காளர்கள், மாவட்ட ஆட்சியரிடம் இதுகுறித்து மனு அளித்தனர். இருப்பினும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், ஆட்சியர் அலுவலகம் முன்பு குவிந்தனர்.
















