சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று மட்டும் ஒன்றரை லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ததாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.
மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காகக் கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 16ம் தேதி திறக்கப்பட்டது.
அதன்படி கார்த்திகை ஒன்றாம் தேதியான நேற்று மட்டும், சுமார் ஒன்றரை லட்சம் பக்தர்கள், 10 மணி நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்ததாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இனி நாளொன்றுக்கு 90 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் எனவும் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்ததால் ஒன்றரை லட்சம் பேர் அனுமதிக்கப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
















