புதுக்கோட்டை மாவட்டம் வாட்டாத்தூர் ஏரி மடையை கிராம மக்கள் அடைத்து விட்டதால், தண்ணீர் வரத்து தடைபட்டு, செகுட்டான்டியேந்தல் கிராமத்தில் 100 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து அரசு அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்தப் பிரச்னையில் உடனடியாகத் தலையிட்டு, ஏரி மடையை திறந்துவிட வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















