தூத்துக்குடியில் அரசு இசைப்பள்ளியில் ஓராண்டு கால பயிற்சியில் தேர்ச்சி பெற்ற கலைஞர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சான்றிதழ் வழங்கிப் பாராட்டு தெரிவித்தார்.
தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் தமிழக அரசு இசை பள்ளியில் ஏராளமான மாணவர்கள் தமிழக பாரம்பரிய கலைகளை கற்று வருகின்றனர்.
அங்கு, பரதம், வில்லிசை, கரகம், புலியாட்டாம், குயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலைகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஓராண்டு கால பயிற்சியில் ஈடுபட்டு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டினார்.
தொடர்ந்து இசைக் கலைஞர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வில்லிசை இசைத்து மாவட்ட ஆட்சியருக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்தனர்.
















