டெல்லியில் உள்ள மாவட்ட நீதிமன்றங்கள், 2 சிஆர்பிஎஃப் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுகப்பட்டதால் அங்குப் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
டெல்லியில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களுக்கும் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர்.
இதேபோல் 2 சிஆர்பிஎஃப் பள்ளிகளுக்கும் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து அங்குச் சென்ற போலீசார் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
தொடர்ந்து சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது புரளி எனத் தெரியவந்தது. இதையடுத்து மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















