கோவை வருகை தரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி போராட்டம் நடத்தப் போவதாகப் போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மாநகர காவல் ஆணையரிடம் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் மனு அளித்தார்.
கோவை கொடிசியா வளாகத்தில் நாளை நடைபெறவுள்ள விவசாயிகள் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார்.
இதற்காகக் கோவை செல்லும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி போராட்டம் நடத்தப்போவதாகப் பெரியார் திராவிடர் கழகத்தில் நடந்த கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து போராட்டம் தொடர்பாக அவினாசி சாலையில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள், இணையத்தில் வெளியாகின.
இந்த நிலையில், போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூறி மாநகர காவல் ஆணையரிடம் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் மனு அளித்தார்.
அதில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் போஸ்டர் ஒட்டியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
















