திருப்பத்தூர் மாவட்டம் அச்சமங்கலம் பகுதியில் கஞ்சா போதையில் கத்தியைக் காட்டி மிரட்டி ரகளையில் ஈடுபட்ட இளைஞரைச் சகோதர்கள் தாக்கிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
அச்சமங்கலம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவருடைய வீட்டில் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்று உள்ளது.
அப்போது கஞ்சா போதையில் அங்குச் சென்ற அம்மையப்பன் நகர் பகுதியைச் சேர்ந்த மனோஜ், விழாவிற்கு வந்தவர்களிடம் கத்தியைக் காண்பித்து ரகளையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்த செல்வராஜ் மற்றும் அவருடைய அண்ணன், தம்பிகள், இளைஞரை அடித்துத் துவம்சம் செய்துள்ளனர்.
இதனால் காயமடைந்த மனோஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















