காகிதக் குடுவைகளில் மது வணிகம் செய்ய நினைத்ததற்காகவே திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும் எனப் பாமக தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், மது வகைகளைச் சிறிய அளவிலான காகிதக் குடுவைகளில் அடைத்து விற்பனை செய்வது மிகவும் ஆபத்தானது என உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டில் டெட்ரா பேக்குகள் எனப்படும் காகிதக் குடுவைகளில் மது விற்க தமிழக அரசு முடிவு செய்திருந்ததை சுட்டிக்காட்டிய அன்புமணி, பாட்டாளி மக்கள் கட்சியின் கடும் எதிர்ப்பு மற்றும் போராட்டத்தால் அதனைத் திமுக கைவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வருங்காலத் தலைமுறையினரை சீரழிக்கும் வகையில் காகிதக் குடுவைகளில் மது வணிகம் செய்ய நினைத்ததற்காகவே திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும் எனவும் பதிவிட்டுள்ளார்.
















